“திறமையை நிரூபித்தாலும் ஸ்ரேயஸ் ஐயரை குறைத்தே மதிப்பிடுகிறார்கள்” - அனில் கும்ப்ளே ஆதங்கம்

ஸ்ரேயஸ் ஐயர், அனில் கும்ப்ளே

ஸ்ரேயஸ் ஐயர், அனில் கும்ப்ளே

Updated on
2 min read

மும்பை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் கோலாகல​மாக தொடங்​கு​கின்றன. தொடக்க ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் மோதுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகை​யில் அனைத்து அணி​களும் தீவிர​மாக பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளன.

பஞ்​சாப் கிங்ஸ் அணி இம்​முறை​யும் ஸ்ரேயஸ் ஐயர் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. கடந்த சீசனில் அந்த அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​திருந்​தது. புதிய கேப்​ட​னாக பொறுப்​பேற்ற முதல் சீசனிலேயே பஞ்​சாப் அணியை ஸ்ரேயஸ் ஐயர் உயரத்​துக்கு கொண்டு சென்​றிருந்​தார். இதனால் இந்த சீசனிலும் அவர், மீது அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது.

இந்​நிலை​யில் ஜியோ ஸ்டார் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்டு இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான அனில் கும்ப்ளே கூறிய​தாவது: ஸ்ரேயஸ் ஐயர் நிச்​சய​மாக ஒரு குறைத்து மதிப்​பிடப்​பட்ட கேப்​டன் ஆவார். ஒரு அணி​யில் விளை​யாடி கோப்​பையை வென்​று​விட்​டு, பின்​னர் மற்​றொரு அணிக்​குச் செல்​வது என்​பது அவ்​வளவு எளி​தான காரி​யம் அல்ல. அங்கு நிர்​வாகம், சூழல் மற்​றும் அணி என எல்​லாமே வேறாக இருக்​கும். அழுத்​த​மும் மாறு​படும்.

அவர், இணைந்த புதிய அணி (பஞ்​சாப் கிங்​ஸ்) கடந்த 10 ஆண்​டு​களாக இறு​திப் போட்​டிக்​குத் தகுதி பெறாமல் இருந்​தது. ஆனால், பஞ்​சாப் கிங்ஸ் அணி​யில் இணைந்த தனது முதல் சீசனிலேயே அவர்​களை இறு​திப் போட்​டிக்கு அழைத்​துச் சென்​றார் ஸ்ரேயஸ் ஐயர். அவருடைய கேப்​டன்சி மட்​டுமல்ல, ஒரு தலை​வ​னாக முன்​னின்று அவர் அணியை வழிநடத்​திய விதம் என்னை மிக​வும் கவர்ந்​தது.

ஒவ்​வொரு முறை​யும் தங்​களை நிரூபிக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் சில வீரர்​கள் இருப்​பார்​கள். ஸ்ரேயஸ் ஐயர் அப்​படித்​தான். சிறப்​பாகச் செயல்​பட்ட பிறகும், அவர் மீது கேள்வி​கள் எழுப்​பப்​பட்​டுக் கொண்டே இருக்​கின்​றன. அவர், குறைத்து மதிப்​பிடப்​பட்ட வீரர் என்று நான் நினைக்​கிறேன், ஆனால் அவர், விதி​விலக்​கான கேப்​டன்.

இரண்டு ஆண்​டு​களுக்கு முன்​னர் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்று தங்​களது மூன்​றாவது கோப்​பையைக் கைப்​பற்​றியது. அந்த வெற்​றி​யின் முக்​கி​யத் தூண்​களாக ஸ்ரேயஸ் ஐயர் மற்​றும் பில் சால்ட் இருந்​தனர். வெற்​றிக்கு அவர்​கள் இரு​வரும் மிக முக்​கிய​மான பங்​களிப்பை வழங்​கினர். ஆனால், கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர்​கள் இரு​வரை​யும் விடு​வித்​து​விட்​டது. வீரர்​களைத் தக்​கவைப்​ப​தில் அந்த அணி​யிடம் எவ்​விதத் தொடர்ச்​சி​யும் இல்​லை.

ஸ்ரேயஸ் ஐயர் மற்​றும் பில் சால்ட்டை வெளி​யேற்​றியதன் மூலம் கேகேஆர் தவறான முடிவை எடுத்​துள்​ளது. இது ஐபிஎல் கோப்​பையை வென்ற ஒரு கேப்​டன் அந்த அணி​யில் இல்​லாத நிலையை உரு​வாக்​கி​யுள்​ளது. ஆம், அஜிங்க்யா ரஹானே அனுபவம் வாய்ந்த வீரர் என்​ப​தில் சந்​தேகமில்​லை. அவர் உள்​நாட்​டுப் போட்​டிகளில் மும்பை அணி​யை​யும், ஐபிஎல்​-லில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யை​யும் வழிநடத்​தி​யுள்​ளார்.

ஆனால், ஒரு கேப்​ட​னாக அவர் ஐபிஎல் கோப்​பையை வென்​ற​தில்​லை. கோப்​பையை வென்ற ஒரு கேப்​டன் அணியை வழிநடத்​து​வது கூடு​தல் பலத்​தைத் தரும். அந்​தச் சாதக​மான அம்​சத்தை கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி இழந்​து​விட்​டது. தங்​களது முக்​கிய வீரர்​களை எவ்​வாறு தக்​க​வைத்​துக் கொள்​வது என்​பதை கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணி கற்​றுக்​கொள்ள வேண்​டும். இல்​லை​யெனில், அவர்​கள் தொடர்ந்து தடு​மாற்​றத்​தைச் சந்​திப்​பார்​கள். மேலும் கோப்​பையை வெல்​லக்​கூடிய அணி​யாக அவர்​களைக்​ கருத முடி​யாது. இவ்​வாறு அனில்​ கும்​ப்​ளே கூறினார்.

<div class="paragraphs"><p>ஸ்ரேயஸ் ஐயர், அனில் கும்ப்ளே</p></div>
மார்ச் 19-ல் திருமலையில் உகாதி ஆஸ்தானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in