விளையாட்டு

இந்​திய அணிக்கு அடுத்த 6 மாதங்கள் முக்​கிய​மான காலம்: சொல்கிறார் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர்

செய்திப்பிரிவு

திரு​வனந்​த​புரம்: இந்​திய மகளிர் அணிக்கு அடுத்த 6 மாதங்​கள் முக்​கிய​மான கால​மாக அமைந்​துள்​ளது என்று அணி​யின் கேப்டன் ஹர்​மன்​பிரீத் கவுர் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தி​யா, இலங்கை மகளிர் அணி​களுக்கு இடையி​லான 5-வது மற்​றும் கடைசி டி20 கிரிக்​கெட் போட்டி நேற்று முன்​தினம் திருவனந்​த​புரத்​தில் நடை​பெற்​றது. இதில் முதலில் விளை​யாடிய இந்திய அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 175 ரன்​கள் எடுத்தது.

கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 43 பந்​துகளில் 68 ரன்​கள் விளாசி​னார். அமன்​ஜோத் கவுர் 21, அருந்​ததி ரெட்டி 27 ரன்​கள் எடுத்​தனர். பின்​னர் விளை​யாடிய இலங்கை அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 160 ரன்​கள் எடுத்து 15 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. இதன் ​மூலம் இந்​தத் தொடரை இந்​திய அணி 5-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்​பற்​றியது.

இந்​தப் போட்​டி​யில் ஹர்​மன்​பிரீத் கவுர் ஆட்​ட​நாயகி​யாக​வும், ஷபாலி வர்மா தொடர்​நாயகி​யாக​வும் தேர்வு செய்​யப்​பட்​டனர். போட்டி முடிந்த பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கேப்​டன் ஹர்​மன் பிரீத் கவுர் கூறிய​தாவது: இலங்​கைக்கு எதி​ரான தொடரை முழு​மை​யாக கைப்​பற்​றிய​தில் மகிழ்ச்​சி​யாக உள்​ளோம்.

2025-ல் 50 ஓவர் உலகக் கோப்​பையைக் கைப்​பற்​றினோம். அடுத்த ஆண்​டில் டி20 உலகக் கோப்பை பிரிட்​டனில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​காக நாங்​கள் மிகச் சிறந்த முறை​யில் தயா​ராக உள்​ளோம். எனவே, அடுத்த 6 மாத காலம் இந்​திய மகளிர் அணிக்கு மிக​வும் முக்​கிய​மான கால​மாக அமைந்​துள்​ளது.

இந்த 6 மாத காலத்​தில் சிறந்த முறை​யில் பயிற்சி பெறு​வோம். 2025-ம் ஆண்டு இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணிக்கு சிறந்​த​தாக அமைந்​தது. அதைப் போலவே 2026-ம் ஆண்​டும் மிகச்​சிறப்​பாக அமை​யும் என எண்​ணுகிறோம். அடுத்து வரவுள்ள 6 மாத காலத்தில் பல்​வேறு போட்​டிகளில் நாங்​கள் பங்​கேற்​க​வுள்​ளோம்.

இது டி20 உலகக் கோப்​பைப் போட்​டிக்​கான சிறந்த பயிற்​சி​யாக அமை​யும். ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடி விட்டு உடனடி​யாக சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிக்கு எங்​களை மாற்றிக் கொள்​வது எளி​தான விஷ​யம் கிடை​யாது. ஆனால், இலங்கைக்கு எதி​ரான தொடரில் அணி​யில் உள்ள ஒவ்​வொரு வீராங்​க​னை​யும் உற்​சாகத்​துடன் விளை​யாடினர்.

அது​மட்​டுமல்​லாமல் விரை​வில் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) போட்​டி​யும் நடை​பெறவுள்​ளது. இந்​தப்​ போட்​டி​யில்​ விளை​யாடு​வது மிகப்​பெரிய அனுபவத்​தைக்​ கொடுக்​கும்​. அது டி20 உலகக்​ கோப்​பைப்​ போட்​டிக்​கு உதவும்​.இவ்​வாறு அவர்​ தெரிவித்​​தார்​.

SCROLL FOR NEXT