விளையாட்டு

தேசிய சிலம்பப் போட்டி: தமிழக வீராங்கனைக்கு வெள்ளி

செய்திப்பிரிவு

சென்னை: டெல்லியில் நடைபெற்ற தேசிய பள்ளி விளையாட்டு (எஸ்ஜிஎப்ஐ) சிலம்பப் (கட்கா) போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி கே. புவனபிரியா வெள்ளி வென்றார்.

இந்தப் போட்டி டெல்லியில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியின் யு-17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற புவனபிரியா, 2-வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். எஸ்ஜிஎப்ஐ கட்கா போட்டியில் தமிழகத்துக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT