புதுடெல்லி: 79-வது தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி புதுச்சேரியை தோற்கடித்தது.
2025- 26ம் ஆண்டுக்கான சந்தோஷ் கோப்பைக்கான 79-வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று புதுச்சேரியுடன் மோதியது. ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள ஆர்டிடி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமான வெற்றியை ருசித்தது.
தமிழக அணி சார்பில் 40-வது நிமிடத்தில் எஸ்.தேவதத் ஒரு கோலடித்தார். இதைத் தொடர்ந்து 68-வது நிமிடத்தில் தமிழக வீரர் அலெக்சாண்டர் ரொமாரியோ ஜேசுதாஸ் மேலும் ஒரு கோலடித்தார். ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது தமிழக வீரர் எஸ்.பிரகதீஸ்வரன் ஒரு கோலடித்தார்.
இதையடுத்து தமிழக அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. 86-வது நிமிடத்தில் இந்த கோலை தமிழக வீரர் பிரகதீஸ்வரன் அடித்தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே தமிழக அணி 3-0 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.