சென்னை: ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நேதன் எல்லிஸ், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி இன்னும் தேர்வு செய்யவில்லை.