லக்னோ: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நந்த்ரே பர்கருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நந்த்ரே பர்கர் ஐபிஎல் நன்னடத்தை விதி 2.5-ஐ மீறியதால் அவருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நன்னடத்தை விதி 2.5 என்பது போட்டியின் போது எதிரணியின் வீரரை இழிவுபடுத்தும் விதமாகவோ அல்லது அவரை ஆக்ரோஷமாகத் தூண்டும் விதமாகவோ மொழி, செயல் அல்லது சைகைகளைப் பயன்படுத்துதல் தொடர்பானதாகும்.