விளையாட்டு

முருகப்பா ஹாக்கி போட்டி: இந்திய கடற்​படை சாம்பியன்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் நடை​பெற்ற 97-வது அகில இந்​திய எம்சிசி-முருகப்பா தங்​கக் கோப்பை ஹாக்​கிப் போட்​டி​யில் இந்திய கடற்​படை அணி முதலிடம் வென்று கோப்​பையைக் கைப்பற்​றியது. சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற இறுதிப் போட்டி​யில் இந்​திய கடற்​படை அணி 5-4 என்ற கணக்​கில் பிபிசிஎல் அணியை வீழ்த்​தி​யது.

நிர்​ணயிக்​கப்​பட்ட நேரத்​தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை​யில் இருந்​தன. இதையடுத்து வெற்​றியைத் தீர்​மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் கடைப்​பி​டிக்​கப்​பட்​டது. இதில் 5-4 என்ற கணக்​கில் இந்​திய கடற்​படை அணி வெற்றி பெற்று கோப்​பையைக் கைப்​பற்​றியது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT