விளையாட்டு

இந்திய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தார் மெஸ்ஸி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அர்​ஜெண்​டினா அணி​யின் கால்​பந்து நட்​சத்​திர​மான லயோனல் மெஸ்ஸி கடந்த 14-ம் தேதி வணிக நோக்​கிலான 3 நாட்கள் சுற்​றுப்​பயண​மாக தனது குழு​வினருடன் இந்​தியா வந்தார்.

அவருடன் சக அணி​யைச் சேர்ந்த ரோட்​ரிகோ டி பால், உரு​குவே கால் ​பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ் ஆகியோ​ரும் வந்​திருந்​தனர். இவர்​கள் கொல்​கத்​தா, ஹைதர​பாத், மும்பை ஆகிய நகரங்​களில் நடை​பெற்ற நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றனர். இதன் தொடர்ச்​சி​யாக நிறைவு நாளான நேற்று டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​க மெஸ்ஸி குழுவினர் வந்தனர்.

மோசமான வானிலை காரணமாக காலை 10.45 மணிக்கு வரவேண்டிய மெஸ்ஸியின் விமானம், பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. அவரை பார்ப்​ப​தற்​காக மைதானத்​தில் 25 ஆயிரம் ரசிகர்​கள் கூடி​யிருந்​தனர். மைதானத்​தில் நுழைந்த மெஸ்​ஸி, ரசிகர்​களை பார்த்து கையசைத்​தார். அப்​போது ரசிகர்கள் ஆரவாரம் செய்​தனர்.

30 நிமிட நிகழ்​வின் முடி​வில் ஐசிசி தலை​வர் ஜெய் ஷா, மெஸ்ஸியை சந்​தித்து அவருக்கு 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்​திய அணி​யினர் கையெழுத்​திட்ட பேட்டை பரி​சாக வழங்​கி​னார். மேலும் 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள டி 20 உலகக் கோப்பை போட்டியை காண்​ப​தற்​கான அழைப்​பும் வழங்​கப்​பட்​டது.

அத்​துடன் மெஸ்​ஸிக்கு இந்​திய அணியின் ஜெர்​சி​யும் பரி​சாக கொடுக்​கப்​பட்​டது. நிகழ்ச்​சி​யில் டெல்லி முதல்​வர் ரேகா குப்தா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். முன்ன​தாக மெஸ்​ஸியை முன்​னாள் இந்​திய கால்​பந்து அணி​யின் கேப்​டன் பாய்ச்​சுங் பூட்​டியா சந்​தித்​தார்.

சர்ச்சையில் நடிகை சுபஸ்ரீ: ​கொல்​கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்கேற்க மெஸ்ஸி வந்​த​போது அவருடன் நடிகை சுபஸ்ரீ புகைப்​படங்​கள் எடுத்​தார். மைதானத்​தில் சுபஸ்ரீ சுமார் 20 நிமிடங்​கள் செலவிட்​ட​தாக தெரி​கிறது. மெஸ்​ஸி​யுடன் எடுத்த படங்​களை சுபஸ்ரீ சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டார்.

இதையடுத்து விளை​யாட்டு வீரர்​கள் இருக்க வேண்​டிய இடத்​தில் நடிகைக்கு என்ன வேலை என்ற ரீதி​யில் இணை​யதளத்​தில் பலர், நடிகை சுபஸ்ரீக்கு எதி​ராக கருத்​துகளை பதிவு செய்​தனர். இது தொடர்​பாக சுபஸ்ரீ​யின் கணவரும், திரிண​மூல் காங்​கிரஸ் எம்எல்ஏவு​மான ராஜ் சக்​ர​வர்த்தி திடாகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT