மேட் ரென்ஷா
டர்பன்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 65.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.
மேட் ரென்ஷா 46, கேப்டன் பாட் கம்மின்ஸ் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 137.2 ஓவர்களில் 390 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
தனது 2-வது சதத்தை விளாசிய மேட் ரென்ஷா 397 பந்துகளில், 21 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 190 ரன்கள் விளாசி கடைசி வீரராக ஆட்டமிழந்தார்.
பாட் கம்மின்ஸ் 43, மிட்செல் ஸ்டார்க் 6, நேதன் லயன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹேசில்வுட் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4, மார்கோ யான்சன் 3, அன்ரிச் நோர்க்கியா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது.