மேக்னஸ் கார்ல்சன்

 
விளையாட்டு

ஃபிடே தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை இழக்கும் நிலையில் மேக்னஸ் கார்ல்சன்

செய்திப்பிரிவு

புடாபெஸ்ட்: ஹங்​கேரி​யின் புடாபெஸ்ட் நகரில் டோட்​டல் செஸ் உலக சாம்​பியன்​ஷிப் டூரின் விரைவு கிளாசிக்​கல் போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதன் 3-வது நாள் ஆட்​டத்​தில் உல​கின் முதல் நிலை வீரர் நார்​வேயின் மேக்​னஸ் கார்ல்​சன், ஆர்​மீனியாவின் ஹைக் மார்​டிரோஸ்யனை எதிர்த்து விளை​யாடினார். இதில் 41-வது நகர்த்​தலின் போது கார்ல்​சன் தோல்வி அடைந்​தார். கார்​சல்​சனுக்கு இது முதல் தோல்​வியாக அமைந்​தது.

இந்த தோல்​வியால் 35 வய​தாகும் கார்ல்​சன் நம்​பர் ஒன் இடத்தை இழக்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை முதல் உல​கின் நம்​பர் 1 வீரராக இருந்து வரும் கார்ல்​சன், ஃபிடேவின் லைவ் ரேட்​டிங்​கில் 15.8 புள்​ளி​கள் குறைந்து 2,807.2 புள்​ளி​களு​டன் உள்​ளார்.

இதற்​கிடையே, அமெரிக்​கா​வின் ஃபேபியானோ கருணா 5 வெற்​றிகள், 2 டிராக்​களைப் பதிவு செய்து 17 தரவரிசைப் புள்​ளி​களைப் பெற்று 2,800 புள்​ளி​களை எட்​டியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT