திண்டுக்கல்: டாக்டர் சேவியர் பிரிட்டோ - எக்ஸ்பி குரூப் சேலஞ்சர் கோப்பைக்கான 2-வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து தொடர் திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் ஈரோடு ராஜேந்திரா மெட்ரிக் பள்ளியை வீழ்த்தி கோப்பையை வென்றது. திண்டுக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சேலம் அணியை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது.
பரிசளிப்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க துணைத் தலைவர் ரமேஷ் பட்டேல், செயலாளர் சண்முகம் மற்றும் சுந்தரராஜன், சுகுமார், ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.