

ரெட்வுட் சிட்டி: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலி பகுதியில் சிலிக்கான் வேலி ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் பிரிவு அரை இறுதி சுற்றில் 15-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்தை எதிர்த்து விளையாடினார். இதில் அனஹத் சிங் 11-5, 6-11, 4-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.