லவ்​லினா போர்கோஹைன்

 
விளையாட்டு

பிறந்த நாளில் தங்கம் வென்ற லவ்லினா: ஆசிய விளையாட்டு போட்டி

செய்திப்பிரிவு

நகோயா: 20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 14-வது நாளான நேற்று மகளிருக்​கான குத்​துச்​சண்​டை​யில் 75 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் லவ்​லினா போர்கோஹைன், சீனா​வின் ஸியி பாவுடன் மோதி​னார். இதில் தொடக்​கம் முதலே ஆதிக்​கம் செலுத்​திய லவ்​லினா போர்​கோஹைன் 5-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றார்.

இதன் மூலம் ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் தங்​கம் வெல்ல வேண்​டும் என்ற அவரது தாகம் 12 வருடங்​களுக்கு பிறகு தணிந்​தது. முத்​தாய்ப்​பாக இந்த தங்​கப் தக்​கத்தை லவ்​லினா போர்​கோஹைன் தனது பிறந்த நாளில் வென்​றது சிறப்​பம்​ச​மாக அமைந்​தது. நேற்று அவருக்கு 29-வது பிறந்த நாளாகும்.

கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்​சோ​வில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் லவ்​லினா போர்​கோஹைன் வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்​தார். தற்​போது உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்தி தங்​கப் பதக்​கத்தை வென்​றுள்​ளார்.

இதன் வாயி​லாக ஆசிய விளை​யாட்டு வரலாற்​றில் மகளிர் குத்​துச்​சண்​டை​யில் தங்​கப் பதக்​கம் வென்ற 2-வது வீராங்​கனை என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளார் லவ்​லினோ போர்​கோஹைன். இதற் கு முன்​னர் 2014-ம் ஆண்டு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் 51 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் மேரி​கோம் தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார்.

லவ்​லினா போர்​கோஹைன் கூறும்​போது, “எனது பிறந்​த​நாள் சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்​தது மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. எனது பிறந்​த​நாளுக்கு நானே தங்​கப் பதக்​கத்​தைப் பரி​சாகத் தரு​வேன் என்று நினைத்​தேன். அந்த வகை​யில் நான் எனக்கே ஒரு பரிசைப் பெற்​றுக்​கொள்​வது இதுவே முதல் முறை. இதற்​காக முழு மூச்​சுடன் உழைத்​தேன். தோற்​று​விடு​வேன் என்று ஒரு வினாடி கூட நினைக்​க​வில்​லை​” என்​றார்​.

SCROLL FOR NEXT