விளையாட்டு

இலங்கை கிரிக்​கெட் அணி வேகப்​ பந்​து​வீச்சு ஆலோ​சக​ராக லசித் மலிங்கா நியமனம்

செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை கிரிக்​கெட் அணி​யின் வேகப் பந்​து​வீச்சு ஆலோ​சக​ராக அந்த அணி​யின் முன்​னாள் வேகப் பந்​து ​வீச்​சாளர் லசித் மலிங்கா நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெறவுள்​ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்​காக அனைத்து அணி​களும் தயா​ராகி வரும் நிலை​யில், போட்​டியை நடத்​தும் நாடு​களில் ஒன்​றான இலங்​கை, அந்த அணி​யின் வேகப் பந்​து​வீச்சு ஆலோ​சக​ராக முன்னாள் வேகப் பந்​து​வீச்​சாளர் லசித் மலிங்​காவை நேற்று நியமனம் செய்​துள்​ளது.

இலங்கை அணி​யின் வேகப் பந்​து​வீச்சு ஆலோ​சக​ராக மலிங்கா வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வரை செயல்​படு​வார் என இலங்கை கிரிக்​கெட் வாரி​யம் தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்​வ​தேச போட்​டிகளில் மலிங்கா பெற்றுள்ள மிக நீண்ட அனுபவம் இலங்கை அணிக்கு வரும் டி20 உலகக் கோப்​பை​யில் பெரும் உதவி​யாக இருக்​கக் கூடும் என்று கிரிக்​கெட் விமர்​சகர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இலங்கை அணிக்​காக 84 சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள லசித் மலிங்கா மொத்​தம் 107 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளார். 42 வயதாகும் அவர் டி20 லீக் தொடர்​களில் பல்​வேறு அணி​களுக்கு பயிற்​சி​யளித்​துள்ள அனுபவம் கொண்டவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT