லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.
வரும் 14-ம் தேதி நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, பிரான்ஸை சந்திக்கிறது. இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான லமின் யமால் கூறும்போது, “என்னுடைய கருத்தின்படி பிரான்ஸ் அணி யாரையாவது பார்த்து பயந்தால் அது எங்கள் அணியாகவே இருக்கும்.
நாங்கள் ஏற்கெனவே அவர்களை தோற்கடித்துள்ளோம். அதனால், எங்களுக்கு எந்த அணி குறித்தும் பயம் என்பது இல்லை. 2 அணிகளுமே தலைசிறந்த அணிகள், உலகத் தரம் வாய்ந்த அணிகள். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்போம்” என்றார்.