விளையாட்டு

வில்வித்தையில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று கும்கும் சாதனை @ ஆசிய விளையாட்டு போட்டி

செய்திப்பிரிவு

நகோயா: 20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 14-வது நாளான நேற்று வில்​வித்​தை​யில் மகளிருக்​கான ரீகர்வ் தனி​நபர் பிரி​வில் இறு​திப் போட்டி நடை​பெற்​றது.

இதில் இந்​தி​யா​வின் கும்​கும் அனில் மோஹோத், தென் கொரி​யா​வின் ஓ இஜ்-​யினை எதிர்​கொண்​டார். இந்த போட்டி 5-5 (27-29 29-29 30-29 27-28 30-28) என சமநிலை​யில் முடிவடைந்​தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க ஷுட் அவுட் நடத்​தப்​பட்​டது.

இதில் கும்​கும் அனில் மோஹோத் 10 புள்​ளி​கள் கொண்ட உள்​வட்​டத்தை குறி​வைத்து தாக்​கி​னார். இதனால் கும்​கும் 6-5 என்ற கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்று வரலாற்று சாதனை படைத்​தார். ஆசிய விளை​யாட்டு வரலாற்​றில் வில்​வித்​தை​யில் ரீகர்வ் தனி​நபர் பிரி​வில் இந்​தியா தங்​கப் பதக்​கம் வெல்​வது இதுவே முதன்​முறை​யாகும்.

இதற்கு முன்​னர் கடந்த 2010-ம் ஆண்டு குவாங்​ஸோ​வில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான ரீகர்வ் பிரி​வில் இந்​தி​யா​வின் தருண்​தீப் ராய் வெள்​ளிப் பதக்​கம் வென்​றதே சாதனை​யாக இருந்​தது. முன்​ன​தாக கும்​கும் அனில் மோஹோத் கால் இறு​தி​யில் நடப்பு உலகச் சாம்​பிய​னான காங் சேயுங்கை 6-4 என்ற கணக்​கில் வீழ்த்​தி​னார். தொடர்ந்து நடை​பெற்ற அரை இறு​தி​யில் உலகச் சாம்​பியன்​ஷிப்​பில் வெள்​ளிப் பதக்க வென்​றவரும், முன்​னாள் முதல் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் ஜிங்கி ஜித்​துவை 6-2 என்ற கணக்​கில் தோற்​கடித்​தார்.

நடப்பு ஆசிய விளை​யாட்டு தொடரில் கும்​கும் அனில் மோஹோத்​துக்கு இது 3-வது பதக்​க​மாக அமைந்​தது. அவர், ரீகர்வ் மகளிர் அணி​கள் பிரி​வில் அங்​கிதா பகத், கிர்த்தி சர்மா ஆகியோ​ருடன் இணைந்து தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார். மேலும் கலப்பு அணி​கள் பிரி​வில் தீரஜ் பொம்​மதேவ​ரா​வுடன் இணைந்து வெள்​ளிப் பதக்​க​மும் கைப்​பற்​றி​யிருந்​தார். தற்​போது தங்​கப் பதக்​கம் வென்​றதன் வாயி​லாக கும்​கும் அனில் மோஹோத் வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்​ஸ் நகரில் நடை​பெற உள்ள ஒலிம்​பிப்​ போட்​டிக்​கு நேரடி​யாக தகு​தி பெற்​றார்​.

SCROLL FOR NEXT