அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு அணி, மணிப்பூருடன் மோதியது.
இதில் தமிழ்நாடு அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. மணிப்பூர் அணி தரப்பில் 66-வது நிமிடத்தில் செஞ்ஜம் ஆல்வா தேவி கோல் அடித்தார்.
தமிழ்நாடு அணி சார்பில் 84-வது நிமிடத்தில் அன்விதா ரகுராமன் கோல் அடித்தார். இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 111-வது நிமிடத்தில் மணிப்பூர் அணியின் சிங்க்ஹமாயும் ரெடிமா தேவி கோல் அடித்து அசத்தினார். இது அணியின் வெற்றி கோலாக அமைந்தது.