T20 World Cup 2026: ஒரே குரூப்பில் விளையாடும் இந்தியா, பாகிஸ்தான் - அட்டவணை வெளியீடு

இந்திய வீரர் அபிஷேக் சர்மா

இந்திய வீரர் அபிஷேக் சர்மா

Updated on
1 min read

சென்னை: எதிர்வரும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன. இதில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்திய அணி களம் காண்கிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அந்த ஆட்டம் இலங்கையில் நடைபெறும். பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையிலான ஒப்பந்தம் காரணமாக இரு அணிகளும் பொதுவான மைதானங்களில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 7 முதல் 20-ம் தேதி வரையிலான நாட்களில் மொத்தம் 40 குரூப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் பின்னர் பிப்ரவரி 21 முதல் மார்ச் 1-ம் தேதி வரை ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டங்களும், மார்ச் 4 மற்றும் 5-ம் தேதி அரையிறுதியும், மார்ச் 8-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.

இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. முதல் சுற்றில் ஒரு குரூப்புக்கு 5 அணிகள் என விளையாடுகின்றன. இந்த தொடர் இந்தியாவில் உள்ள டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையில் உள்ள கொழும்பில் உள்ள 2 மைதானங்களிலும் மற்றும் கண்டியிலும் நடைபெறுகிறது.

  • குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா.

  • குரூப் பி: ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன்.

  • குரூப் சி: இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், நேபாளம், இத்தாலி.

  • குரூப் டி: நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா.

இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று ஆட்டங்களின் விவரம்:

  • பிப்ரவரி 7 - இந்தியா vs அமெரிக்கா, மும்பை

  • பிப்ரவரி 12 - இந்தியா vs நமீபியா, டெல்லி

  • பிப்ரவரி 15 - இந்தியா vs பாகிஸ்தான், கொழும்பு

  • பிப்ரவரி 18 - இந்தியா vs நெதர்லாந்து, அகமதாபாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in