படம்: எஸ்.சத்தியசீலன்

 
விளையாட்டு

உல​கக் கோப்பை ஜூனியர் ஹாக்கி: இறு​திச் சுற்​றில் ஸ்பெயின், ஜெர்மனி

செய்திப்பிரிவு

சென்னை: உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்​கிப் போட்​டி​யின் இறு​திச் சுற்​றில் விளை​யாட ஸ்பெ​யின், ஜெர்​மனி அணி​கள் தகுதி பெற்​றுள்​ளன.

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்​கிப் போட்​டிகள் சென்​னை, மதுரை ஆகிய நகரங்​களில் நடை​பெற்று வரு​கின்​றன. சென்னை எழும்​பூரிலுள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்​தில் நேற்று மாலை நடை​பெற்ற முதல் அரை இறு​தி​யில் ஸ்பெ​யின், அர்​ஜெண்​டினா அணி​கள் மோதின. இதில் ஸ்பெ​யின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்​ஜெண்​டி​னாவை வீழ்த்தி இறு​திச் சுற்​றுக்கு முன்னேறி​ உள்ளது.

ஆட்​டத்​தின் தொடக்​கம் முதலே, ஸ்பெ​யின் அணி வீரர்​கள் ஆதிக்​கம் செலுத்​தினர். ஆட்​டத்​தின் 7-வது நிமிடத்​திலேயே ஸ்பெ​யின் வீரர் மரியோ மேனா முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்​தார். பெனால்டி கார்​னர் வாய்ப்பு மூலம் இந்த கோலை மரியோ மேனா அடித்​தார்.

இந்​நிலை​யில் ஆட்​டத்​தின் 21-வது நிமிடத்​தில் அர்​ஜெண்​டினா இதற்கு பதிலடி தந்​தது. பெனால்டி கார்​னர் வாய்ப்​பைப் பயன்​படுத்​திய அர்​ஜெண்​டினா வீரர் ஜுவான் பெர்​னாண்​டஸ் கோலடித்து 1-1 என சமநிலையை ஏற்​படுத்​தி​னார்.

ஆட்​டத்​தின் 56-வது நிமிடத்​தின்​போது ஸ்பெ​யின் வீரர் ஆல்​பர்ட் செர்​ராஹிமா ஃபீல்டி கோலடித்து அணிக்கு 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யைப் பெற்​றுத் தந்​தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 2-1 என்ற கோல் கணக்​கில் ஸ்பெ​யின் வெற்றி பெற்று இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறியது.

இந்​தியா தோல்வி: 2-வது அரை இறு​தி​யில் ஜெர்​மனி 5-1 என்ற கணக்​கில் இந்​திய அணியை வீழ்த்தி இறு​திச் சுற்​றுக்​குத் தகுதி பெற்​றது. ஜெர்​மனி அணி தரப்​பில் லுகாஸ் கோசல் 2 கோல்​களும், ஹஸ்​பாக் பென், ஜோனஸ் வான் ஜெர்​சம், டைட்​டஸ் வெக்​ஸ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். இந்​திய அணி தரப்​பில்​ அன்​மோல்​ எக்​கா ஒரு கோலடித்​தார்​.

SCROLL FOR NEXT