விளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி

செய்திப்பிரிவு

மோகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனா​வின் மோகி நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான அரை இறுதி போட்​டி​யில் நேற்று நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா, மலேசி​யா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 3-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று தொடர்ச்​சி​யாக 4-வது முறை​யாக இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது.

இந்​திய அணி தரப்​பில் கேப்​டன் அன்​மோல் ஏக்கா 2 கோல்​களும் (16 மற்​றும் 51-வது நிமிடங்​கள்) சுக்​விந்​தர் ஒரு கோலும் (51-வது நிமிடம்) அடித்து அசத்​தினர்.

இந்த 3 கோல்​களும் பீல்டு கோலாக அமைந்​திருந்​தது. மலேசியா அணி சார்​பில் 60-வது நிமிடத்​தில் ராகுல் கோல் அடித்​தார்.

மற்​றொரு அரை இறுதி ஆட்​டத்​தில் தென் கொரியா 4-1 என்ற கோல் கணக்​கில் பாகிஸ்​தானை வீழ்த்​தி​யது. நாளை (13-ம் தேதி) நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் இந்​தியா - தென் கொரியா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

SCROLL FOR NEXT