விளையாட்டு

ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் ஜோஷ்னா - அனஹத் சிங்

செய்திப்பிரிவு

சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 போட்டி சென்னையில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் 13-11, 11-9, 511, 11-7 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் மாசியோ லெவியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் வேலவன் செந்தில் குமார், எகிப்தின் ஆடம் ஹவாலை எதிர்த்து விளையாடுகிறார்.

மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, சகநாட்டைச் சேர்ந்த தன்வி கன்னாவை 6-11, 12-10, 11-1, 5-11, 11-5 என்ற செட் கணக்கில் போராடி தோற்கடித்தார்.

மற்றொரு அரை இறுதியில் நடப்பு தேசிய சாம்பியனான இந்தியாவின் அனஹத் சிங் 11-8, 11-6, 11-4 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் ஹேலி வார்டை வீழ்த்தினார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா - அனஹத் சிங் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

SCROLL FOR NEXT