லண்டன்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியில் ஜோஷ் டங் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணி பிப்ரவரி 8-ம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் நேபாளத்துடன் மோதவுள்ளது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கையில் நடைபெற உள்ள 3 ஒருநாள், 3 சர்வதேச டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது. இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 போட்டிக்கான உத்தேச அணியிலிருந்து ஜேமி ஸ்மித், ஜோர்டன் காக்ஸ், சஹிப் முகமது, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியின் போது காலில் காயத்தால் விலகிய ஜோப்ரா ஆர்ச்சரின் பெயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பைக்கான இங்கிலாந்தின் உத்தேச அணி விவரம்: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜாஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், ஸாக் கிராவ்லி, சாம் கரண், லியாம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டங், லூக் வுட்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி விவரம்: ஹாரி புரூக், ரெஹான் அகமது, டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜாஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், ஸாக் கிராவ்லி, சாம் கரண், லியாம் டாசன், வில் ஜேக்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத், ஜோ ரூட், லூக் வுட்.
இலங்கையில் நடைபெறும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி: ஹாரி புரூக், ரெஹான் அகமது, டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜாஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாம் கரண், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜேக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங், லூக் வுட்.