ஐசிசி டி20 தரவரிசை: இந்திய வீராங்கனை ஷபாலி 6-ம் இடத்துக்கு முன்​னேற்​றம்

ஐசிசி டி20 தரவரிசை: இந்திய வீராங்கனை ஷபாலி 6-ம் இடத்துக்கு முன்​னேற்​றம்
Updated on
1 min read

துபாய்: சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) வெளி​யிட்​டுள்ள டி20 கிரிக்​கெட் வீராங்​க​னை​கள் தரவரிசை​யில் இந்​தி​யா​வின் ஷபாலி வர்மா 6-ம் இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளார்.

தற்​போது நடை​பெற்று வரும் இலங்​கைக்கு எதி​ரான சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் ஷபாலி வர்மா சிறப்​பாக விளை​யாடி வரு​கிறார். இந்​நிலை​யில் ஐசிசி நேற்று வெளி​யிட்​டுள்ள டி20 வீராங்​க​னை​கள் தரவரிசை​யில் 10-ம் இடத்​திலிருந்து 6-ம் இடத்துக்கு ஷபாலி வர்மா முன்​னேறி​யுள்​ளார்.

இலங்​கைக்கு எதி​ரான தொடரின் முதல் 4 போட்​டிகளில் மட்​டும் அவர் 236 ரன்​களைக் குவித்​துள்​ளார். இந்​திய வீராங்கனை ரிச்சா கோஷ் 20-வது இடத்​துக்கு வந்​துள்​ளார். முதலிடத்​தில் ஆஸ்திரேலிய வீராங்​கனை பெத் மூனி 794 புள்​ளி​களு​டன் இருக்கிறார். 2-வது இடத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வீராங்கனை ஹேலி மேத்​யூஸ் உள்​ளார். ஸ்மிருதி மந்​தனா 767 புள்ளிகளு​டன் 3-வது இடத்​தில் உள்​ளார்.

பந்​து ​வீச்​சாளர்​கள் தரவரிசை​யில் இந்​திய வீராங்​கனை தீப்தி சர்மா 783 புள்​ளி​கள் பெற்று முதலிடத்​தில் உள்​ளார். மற்ற இந்திய வீராங்​க​னை​கள் ரேணுகா சிங் 6-வது இடத்​தி​லும், ஸ்ரீசரணி 52-வது இடத்​தி​லும் உள்​ளனர்.

ஆல்​-ர​வுண்​டர்​கள் தரவரிசை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வீராங்​கனை ஹேலி மேத்​யூஸ் 505 புள்​ளி​களு​டன் முதலிடத்​தி​லும், நியூஸிலாந்​தின் அமேலியா கெர் 434 புள்​ளி​களு​டன் 2-வது இடத்திலும், இந்​தி​யா​வின் தீப்தி சர்மா 387 புள்​ளி​களுடன் 3-ம் இடத்திலும் உள்​ளனர்.

ஐசிசி டி20 தரவரிசை: இந்திய வீராங்கனை ஷபாலி 6-ம் இடத்துக்கு முன்​னேற்​றம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in