ஜெமிமா ரோட்ரிக்ஸ்
புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகி உள்ளார். ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் 25 வயதாகும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 ஆட்டங்களில் விளையாடி 143 ரன்கள் சேர்த்திருந்தார்.
காயம் அடைந்துள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸ் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள மகளிருக்கான ஆசிய கோப்பை டி 20 தொடரில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி தாய்லாந்துடன் மோதுகிறது.