விளையாட்டு

உலகக் கோப்பை செஸ்: ஜாவோகிர் சாம்பியன்

செய்திப்பிரிவு

கோவா: ஃபிடே உல​கக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வந்தது. இதன் இறு​திப் போட்​டி​யில் உஸ்​பெகிஸ்​தானின் 19 வயதான ஜாவோகிர் சிந்​தரோவ், சீனா​வின் வெய் யி மோதினார்கள். முதலில் இவர்​கள் விளை​யாடிய 2 கிளாசிக்​கல் ஆட்​டங்களும் டிரா​வில் முடிவடைந்​திருந்​தன. இதையடுத்து வெற்றியை தீர்​மானிப்​ப​தற்​கான டைபிரேக்​கர் ஆட்​டங்​கள் நேற்று நடை​பெற்​றன.

இதில் முதல் ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​திருந்​தது. இதைத் தொடர்ந்து நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் ஜாவோகிர் சிந்​தரோவ் வெற்றி பெற்​றார். முடி​வில் ஜாவோகிர் சிந்​தரோவ் 2.5-1.5 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்​டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்​தார் ஜாவோகிர் சிந்​தரோவ். சாம்​பியன் பட்​டம் வென்ற அவருக்கு விஸ்வ​நாதன் ஆனந்த் கோப்​பை​யுடன் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT