விளையாட்டு

இலங்​கை​யுடன் டெஸ்ட் தொடர் - ஜஸ்பிரீத் பும்ரா விலகல்?

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இலங்​கையுட​னான கிரிக்​கெட் டெஸ்ட் தொடரிலிருந்து இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வில​க​வுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. முழங்காலில் ஏற்​பட்ட காயம் குணம் அடை​யாத​தால் அவர் இந்​தத் தொடரில் பங்​கேற்​பது சந்​தேக​மாகி​யுள்​ளது.

இந்​திய அணி, இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட​வுள்​ளது. முன்ன​தாக வரும் 7-ம் தேதி, இலங்கை லெவனுட​னான 3 நாள் பயிற்​சிப் போட்​டி​யிலும் இந்​திய அணி விளை​யாட​வுள்​ளது. முதலா​வது டெஸ்ட் போட்டி காலே மைதானத்​தில் வரும் 15-ம் தேதி தொடங்​க​வுள்​ளது. 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி கொழும்​பிலுள்ள சிங்​களீஸ் மைதானத்​தில் தொடங்​க​வுள்​ளது.

இந்​நிலை​யில் இலங்கை டெஸ்ட் தொடருக்​கான இந்​திய அணியில் வேகப்​பந்து வீச்​சாளர் பும்ரா இடம்​பெற்​றுள்​ளார். ஆனால் அவரது முழங்​காலில் ஏற்​பட்ட காயம் குணம் அடையாததால் அவர் தொடரில் பங்​கேற்​பது சந்​தேகம் என்று தெரிய​வந்​துள்​ளது.

அவர் தொடரிலிருந்து வில​கு​வது தொடர்​பாக விரை​வில் பிசிசிஐ அறி​விப்பு வெளி​யிடும் எனத் தெரி​கிறது. தற்​போது பெங்களூருவிலுள்ள திறன்​மிகு மையத்​தில் ஜஸ்​பிரீத் பும்ரா சிகிச்சை பெற்று வரு​கிறார். அங்கு அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்து வரு​கின்​றனர். மேலும் உடலியக்க நிபுணர்களும் அவருக்கு போதிய பயிற்​சியை வழங்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT