ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படுகிறாரா? - மும்பை இந்தியன்ஸ் அணி விளக்கம்

ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படுகிறாரா? - மும்பை இந்தியன்ஸ் அணி விளக்கம்
Updated on
1 min read

மும்பை: கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9-ம் இடம் பிடித்தது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பத்து ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த 2024 ஐபிஎல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் வழிநடத்தினார். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

2024 மற்றும் 2026 சீசனில் முதல் சுற்றோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. 2025 சீசனில் பிளே-ஆப் சுற்றில் விளையாடி இருந்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா, மும்பை அணியில் இருந்து டிரேடிங் முறையில் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி விளக்கம்

“வீரர்களின் செயல்பாடு குறித்து சீசனுக்கு பிந்தைய ரிவ்யூவில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணிக்கு நீண்ட நேரம் தேவை. அணியின் அனைத்து அம்சங்களையும் இதில் கவனத்துக்கு எடுத்துள்ளோம். இப்போது நாங்கள் எந்தவொரு வீரரையும் டிரேட் செய்வது குறித்து பரிசீலிக்கவில்லை. இந்த ரிவ்யூ முடிந்த பிறகே அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்” என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படுகிறாரா? - மும்பை இந்தியன்ஸ் அணி விளக்கம்
ஈரான் மீதான கூட்டு தாக்குதல் தற்காலிக நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in