விளையாட்டு

குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் ஜாதுமணி, பவன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய சீனியர் குத்துச்சண்டை போட்டியின் 50-55 கிலோ ஆடவர் பிரிவில் ஜாதுமணி சிங், பவன் பர்த்வால் முன்னேறியுள்ளனர்.

டெல்லி கிரேட்டர் நொய்டாவிலுள்ள கவுதம புத்தா பல்கலைக்கழக வளாகத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரை இறுதியில் ஜாதுமணி 5-0 என்ற கணக்கில் அமித் பங்காலையும், பவன் பர்த்வால், மணிப்பூரின் விக்டர் சிங்கையும் வீழ்த்தினர்.

மகளிர் பிரிவு 45-48 கிலோ பிரிவு இறுதிச் சுற்றுக்கு உலக சாம்பியன் மீனாட்சி, நிகத் ஜரீன் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

SCROLL FOR NEXT