போலோக்னா: இத்தாலியின் போலோக்னா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிகட்ட போட்டி நடைபெற்று வந்தது.
இதில் நேற்று முன்தினம் பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இத்தாலி அணிகள் மோதின. இதில் இத்தாலி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இத்தாலியின் பெரெட்டினிபாப்லோ 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கரேனோபஸ்டாவை வீழ்த்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலி 1-6, 7-6 (7-5), 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஜவும் மூனாரை தோற்கடித்தார். இத்தாலி அணி 3-வது முறையாக தொடர்ச்சியாக பட்டம் வென்றுள்ளது. அந்த அணி முதன்முறையாக 1976-ல் மகுடம் சூடியிருந்தது. 2023 மற்றும் 2024-ம் ஆண்டில் கோப்பையை வென்றிருந்தது.