விளையாட்டு

உலகக் கோப்பை தகுதி சுற்றில் போஸ்னியாவிடம் தோல்வி: 3-வது முறையாக இத்தாலி வெளியேற்றம்

செய்திப்பிரிவு

ஜெனிகா: பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்​கா, மெக்சிக்​கோ​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஐரோப்​பிய தகுதி சுற்​றின் பிளே ஆஃப் ஆட்டங்​கள் நேற்று நடை​பெற்​றன.

இதில் போஸ்​னி​யா​வில் உள்ள ஜெனிகா நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 4 முறை சாம்​பிய​னான இத்​தாலி, தரவரிசை​யில் 66-வது இடத்​தில் உள்ள போஸ்​னியா மற்றும் ஹெர்​சகோ​வினா அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்தி​யது. 15-வது நிமிடத்​தில் இத்​தாலி அணி​யின் மொயீஸ் கீன் கோல் அடித்து அசத்​தி​னார். இதனால் அந்த அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. 41-வது நிமிடத்​தில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்​டோனிக்கு ரெட் கார்டு வழங்​கப்​பட்​டது.

          

இதனால் இத்​தாலி அணி 10 வீரர்​களு​டன் விளை​யாடும் நிலைக்கு தள்​ளப்​பட்​டது. 79-வது நிமிடத்​தில் போஸ்னியா பதிலடி கொடுத்​தது. அந்த அணி​யின் வீரர் ஹாரிஸ் தபகோ​விச் கோல் அடிக்க ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது. நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 1-1 என சமநிலை​யில் இருந்​தது. இதையடுத்து கூடு​தலாக 30 நிமிடங்​கள் வழங்​கப்​பட்​டது. இதில் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் அடிக்​கப்​பட​வில்​லை. இதனால் வெற்​றியை தீர்​மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்​கப்​பட்​டது.

இதில் போஸ்​னியா மற்​றும் ஹெர்​சகோ​வினா அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு தகுதி பெற்​றது. அந்த அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறு​வது இது 2-வது முறை​யாகும். கடைசி​யாக அந்த கடந்த 2014-ம் முதன்​முறை​யாக உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் விளையாடி இருந்​தது.

அதேவேளை​யில் இத்​தாலி அணி தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடி​யாமல் வெளி​யேறி உள்​ளது. அந்த அணி 2018 மற்​றும் 2022-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை தொடருக்​கும் தகுதி பெற இல்​லை. 1934, 1934, 1982 மற்​றும் 2006-ம் ஆண்​டு​களில் சாம்​பியன் பட்​டம் வென்ற இத்​தாலி அணி தற்​போதைய தோல்​வி​யால் கால்​பந்​தின் மிகப்​பெரிய திரு​விழா​வில் 16 ஆண்​டு​களாக நுழைய முடி​யாமல் தவிப்பு நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது.

மற்ற ஆட்​டங்​களில் சுவீடன் 3-2 என்ற கோல் கணக்​கில் போலந்து அணி​யை​யும், துருக்கி 1-0 என்ற கோல் கணக்​கில் கோசோவோ அணி​யை​யும் தோற்​கடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றன.துருக்கி அணி 2002-ம் ஆண்​டுக்கு பிறகு தற்​போது​தான் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுகிறது. செக் குடியரசு - டென்​மார்க் அணி​கள் மோதிய ஆட்​டம் நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​கள் 1-1 சமனில் முடிந்​தது.

இதன் பின்​னர் வழங்​கப்​பட்ட 30 நிமிடங்​கள் கூடு​தல் நேரத்​தில் இரு அணி​களும் தலா ஒரு கோல் அடித்​தன. இதைத் தொடர்ந்து நடத்​தப்​பட்ட பெனால்டி ஷுட் அவுட்​டில் செக்​குடியரசு 3-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் கால்​ப​தித்​தது. அந்த அணி 2006-ம் ஆண்​டுக்கு தற்​போது​தான்​ உலகக்​ கோப்​பை தொடரில்​ நுழைகிறது. 40 வருடங்​களுக்கு பிறகு இராக் உலகக் கோப்பை கால்​பந்து தகுதி சுற்​றில் கண்​டங்​களுக்கு இடையி​லான பிளே ஆஃப் போட்​டி​யில் நேற்று மெக்​சிகோ​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இராக் - பொலி​வியா அணி​கள் மோதின.

இதில் இராக் அணி 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி சார்​பில் 10-வது நிமிடத்​தில் அலி அல்​-ஹ​மா​தி​யும், 53-வது நிமிடத்​தில் அய்​மன் ஹுசைனும் கோல் அடித்து அசத்​தினர். இந்த வெற்​றி​யின் மூலம் கடைசி அணி​யாக இராக் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றது. 40 வருடங்​களுக்கு பிறகு இராக் அணி உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் கால்​ப​திக்​கிறது. கடைசி​யாக அந்த 1986-ம் ஆண்டு மெக்​சிகோ​வில் நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் விளை​யாடி இருந்​தது.

அமெரிக்​கா-இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையே​யான போரி​னால் ஏற்​பட்ட போக்​கு​வரத்​துத் தடங்​கல் காரண​மாக, இராக் அணி​யின் பெரும்​பாலான வீரர்​கள் பாக்​தாத்​திலிருந்து ஜோர்​டானுக்கு பேருந்​தில் பயணித்து அங்​கிருந்து மெக்​சிகோவை அடைய 3 நாட்​கள் ஆனது. இக்​கட்​டான நிலை​யிலும் இராக் வீரர்​கள் காட்​டிய உறு​தி, உலக கால்​பந்து ரசிகர்​களிடையே பெரிய வரவேற்​பைப் பெற்​றுள்​ளது இராக் அணி உலகக் கோப்பை தொடரில் ‘ஐ’ பிரி​வில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இதே பிரி​வில் பிரான்ஸ், செனகல், நார்வே அணிகளும் இடம் பெற்றுள்ளன.

காங்கோ அசத்தல் மெக்​சிகோ​வில் உள்ள குவாடலஜாரா நகரில் நடை​பெற்ற கண்​டங்​களுக்கு இடையி​லான பிளே ஆஃப் ஆட்​டத்​தில் காங்கோ - ஜமைக்கா அணி​கள் மோதின. இதில் காங்கோ 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றது. அந்த அணி தரப்​பில் கூடு​தல் நேரத்​தின் 100-வது நிமிடத்​தில் ஆக்​சல் டுவான்​செபே கோல் அடித்து அசத்​தி​னார்.

SCROLL FOR NEXT