விளையாட்டு

“இளம் வீரர்கள் நெருக்கடியை சமாளிக்க சிறிது காலமாகும்” - மனம் திறக்கும் ருதுராஜ் கெய்க்வாட்

செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது. இந்​நிலை​யில் தனது சொந்த மைதான​மான சேப்பாக்கத்தில் இன்று பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

இந்த போட்​டியையொட்டி சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் கூறிய​தாவது: ஆடு​களங்​களைப் பொறுத்​தவரை, இங்கு வானிலை தான் பெரிய காரணி​யாக இருக்​கும். சேப்​பாக்கத்​தில் டி 20 உலகக் கோப்பை போட்​டிகள் அனைத்​தும் பிப்​ர​வரி மாதத்​தில் நடைபெற்றன. அப்​போது பனிப்​பொழிவு பெரிய அளவில் இருக்​க​வில்​லை.

          

சிறந்த வானிலை மற்​றும் நல்ல சூழல் இருக்​கும்​போது, பொது​வாக சென்னை ஆடு​களம் விளை​யாடு​வதற்கு நன்​றாக இருக்​கும். ஆனால், இரவு நேரங்​களில் சில சமயங்​களில் அதி​கப்​படி​யான பனிப்​பொழிவு மற்​றும் ஆடு​களத்​தில் சற்று ஈரப்​ப​தம் இருந்​தால், அது ஆட்​டத்​தின் போக்கை மாற்​றக்​கூடும். குறிப்​பாக போட்​டி​யின் இரண்​டாம் பாதி​யில் மாற்​றம் இருக்​கும்.

எனவே, இந்த ஆண்டு ஆடு​களம் எப்​படிச் செயல்​படும் என்​பது குறித்​துத் துல்​லிய​மாகச் சொல்ல முடி​யாது. போட்​டி​யின் போது நில​வும் சூழலுக்கு ஏற்ப நம்மை தகவ​மைத்​துக் கொண்​டு, அனுபவத்​தைப் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். சேப்​பாக்​கத்​தில் 7 ஆட்​டங்​களில் விளை​யாடு​கிறோம். எனவே, ஆடு​களம் எப்​படி​யிருந்​தா​லும், அதை சாதக​மாக எவ்​வளவு பயன்​படுத்த முடி​யுமோ அவ்​வளவு பயன்​படுத்த முயற்​சிப்​போம்.

எங்​களிடம் உள்ள வீரர்​களின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்​பிக்கை உள்​ளது. கார்த்​திக் சர்மா சிக்​ஸர் அடிப்​ப​தில் தனிச்​சிறப்பு வாய்ந்​தவர். வலது கை பேட்​டர்​களில் அவரைப் போல சிக்​ஸர் அடிக்​கும் திறமை கொண்​ட​வர்​களை நான் அதி​கம் பார்த்​த​தில்​லை. அதே​போல், மிகச்​சிறந்த டி 20 சாதனை​களைக் கொண்​டுள்ள உர்​வில் படேல் உள்​ளார். சர்ஃப​ராஸ் கான் சமீப​கால​மாக டி20 போட்​டிகளில் நல்ல ஃபார்​மில் இருக்​கிறார்.

இளம் வீர​ரான பிர​சாந்த் வீரிடம் அபார​மான திறமை​கள் உள்​ளன. எனவே, அணி​யில் திறமைக்கு எந்​தக் குறை​யும் இல்​லை. ஐபிஎல்-ஐ பொறுத்​தவரை குடும்​பத்​தினர், ஊடகங்​கள், அணி வீரர்​கள் என அனை​வரிட​மிருந்​தும் மிகப்​பெரிய அழுத்​தம் இருக்​கும். அதைச் சமாளித்து சிறந்த செயல்​திறனை வெளிப்​படுத்​து​வதற்கு சற்று காலம் எடுக்​கும். அவர்​களுக்கு அந்த நேரத்​தைக் கொடுப்​பது​தான் முக்​கி​யம். எங்​களது பேட்​டிங் வரிசை ஒருங்​கிணைந்து செயல்​படத் தொடங்​கும்​போது மற்​றவர்​கள் வியந்து பார்க்​கும் அணி​யாக மாறும்​. இவ்​வாறு ருது​ராஜ் கெய்க்​வாட்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT