விளையாட்டு

வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் இறுதிச் சுற்றில் இஷாராணி

செய்திப்பிரிவு

ஹோ சி மின் சிட்டி: வியட்​நாம் ஓபன் பாட்​மிண்​டன் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திச் சுற்​றுக்கு இந்​திய வீராங்​கனை இஷா​ராணி பரூவா முன்​னேறி​யுள்​ளார். வியட்​நாமின் ஹோ சி மின் சிட்​டி​யில் இப்​போட்டி நடை​பெற்று வரு​கிறது.

நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர்​பிரிவு அரை இறு​திச் சுற்​றில் இஷா​ராணி பரூவா 21-10, 21-18 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சகநாட்டு வீராங்​கனை ரக்​சிதா ஸ்ரீராம்​ராஜை வீழ்த்​தி​னார்.

மற்​றொரு அரை இறு​தி​யில் தாய்​லாந்து வீராங்​கனை சருண்​ராக் விடிட்​சர்ன் 21-19, 22-20 என்ற கணக்​கில் இந்​தி​யாவின் தன்வி சர்​மா​வைத் தோற்​கடித்​தார். ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​திய வீரர் எச்​.எஸ். பிரணாய் 13-21, 8-21 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சிங்​கப்​பூரின் ஜியா ஹெங்கிடம் வீழ்ந்தார்.

SCROLL FOR NEXT