விளையாட்டு

தோல்வியில் இருந்து மீண்டு வருமா குஜராத்? - ஆர்சிபி அணியுடன் இன்று பலப்பரீட்சை

செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) - குஜராத் டைட்டன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக அந்த அணி சொந்த மைதானத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யிடம் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது. இந்த சீசனில் முதலில் பேட் செய்​தால் 200 ரன்​களுக்கு மேல் வேட்​டை​யாடு​வதை குறி​வைத்து செயல்​படும் ஆர்​சிபி அணி​யால் டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 175 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது.

அந்த ஆட்​டத்​தில் விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல், கேப்​டன் ரஜத் பட்​டி​தார், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா ஆகியோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை. தொடக்க வீர​ரான பில் சால்ட் மட்​டுமே 63 ரன்​கள் சேர்த்து ஆறு​தல் அளித்​திருந்​தார். இன்​றைய ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசை மீண்​டும் அதிரடி பார்​முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 6-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் மும்பை அணி​யிடம் 99 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 200 ரன்​கள் இலக்கை துரத்​திய குஜ​ராத் அணி 100 ரன்​களுக்கு சுருண்​டிருந்​தது. இந்த தோல்​வி​யில் இருந்து மீண்டு வருவதற்​கான முயற்​சி​யில் குஜ​ராத் அணி கவனம் செலுத்​தக்​கூடும்.

ஷுப்​மன் கில், ஜாஸ் பட்​லர் ஆகியோர் ஓரளவுக்கு தொடர்ந்து சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். ஆனால் சாய் சுதர்​சன், கிளென் பிலிப்​ஸ், ராகுல் டெவாட்​டி​யா, ஷாருக்​கான் போன்ற வீரர்​களிடம் இருந்து அணி​யின் வெற்​றிக்​குத் தேவை​யான இன்​னிங்​ஸ்​களோ அல்​லது ஆட்​டத்​தின் போக்கை மாற்​றக்​கூடிய அதிரடி​யான ஆட்​டமோ வெளிப்​பட​வில்​லை.

இவர்​கள் பார்​முக்கு திரும்​பி​னால் அணி​யின் பலம் அதி​கரிக்​கும். பிரசித் கிருஷ்ணா, காகிசோ ரபா​டா, முகமது சிராஜ், ரஷீத் கான் ஆகியோரை உள்​ளடக்​கிய பந்​து​வீச்சு துறை ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசைக்​கு அழுத்​தம்​ ​கொடுக்​கக்​கூடும்​.

SCROLL FOR NEXT