விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிக்கு தடை போடுமா ஆர்சிபி? - குவாஹாட்டியில் இன்று பலப்பரீட்சை

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்​டி​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்​றன.

நடப்பு சாம்​பிய​னான ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ஆர்​சிபி அணி தனது முதல் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத்தை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கேவை 43 ரன்கள் வித்​தி​யாசத்​தி​லும் வீழ்த்​தி​யிருந்​தது. இந்த இரு ஆட்டங்​களை​யும் ஆர்​சிபி அணி தனது சொந்த மைதானத்​தில் விளை​யாடி இருந்​தது. தற்​போது நடப்பு சீசனில் முதன்​முறை​யாக வெளியே சென்று விளை​யாட உள்​ளது.

          

சிஎஸ்கே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார், டிம் டேவிட் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​திருந்​தனர். அதி​லும் டிம் டேவிட் 24 பந்​துகளில் 70 ரன்​கள் விளாசி மிரட்​டி​யிருந்​தார். டாப் ஆர்​டரில் பில் சால்ட், விராட் கோலி​யும் உரிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் ஜேக்​கப் டஃபி பலம் சேர்த்து வரு​கிறார். நடு ஓவர்​களில் கிருணல் பாண்​டி​யா, சுயாஷ் சர்மா ஆகியோர் ரன்​கு​விப்பை கட்​டுப்​படுத்​து​வ​தில் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றனர். ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று அசத்​தி​யுள்​ளது. முதல் ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் சிஎஸ்கே அணி​யை​யும், 2-வது ஆட்​டத்​தில் 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யை​யும் வீழ்த்​தி​யிருந்​தது ராஜஸ்​தான் அணி.

கடைசி​யாக மழை​யால் பாதிக்​கப்​பட்டு 11 ஓவர்​களாக நடத்​தப்​பட்ட மும்பை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 27 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் அணி வெற்​றியை வசப்​படுத்​தி​யிருந்​தது. பேட்​டிங்​கில் 15 வயதான வைபவ் சூர்​ய​வன்​ஷி, யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் கூட்​டணி அபார​மான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கிறது. இதில் சூர்​ய​வன்​ஷி, மும்பை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் எந்​த​வித அச்​ச​மும், பதற்​ற​மும் இல்​லாமல் ஜஸ்​பிரீத் பும்ரா வீசிய முதல் பந்திலேயே சிக்​ஸர் விளாசி​யது அனை​வரை​யும் வெகுவாக கவர்ந்​தது.

இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவர், ஆர்​சிபி பந்​து வீச்சாளர்களுக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும். இதே​போன்று கடந்த ஆட்​டத்​தில் 77 ரன்​கள் விளாசிய ஜெய்​ஸ்​வாலிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்படக்கூடும். பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர், நந்த்ரே பர்​கர், சந்​தீப் சர்​மா, துஷார் தேஷ்​பாண்​டே, ரவி பிஷ்னோய் ஆகியோர் பலம் சேர்த்து வரு​கின்​றனர். இவர்​கள், ஆர்​சிபி அணி​யின்​ பேட்​டிங்​ வரிசைக்​கு ச​வால் அளிக்கக்கூடும்.

SCROLL FOR NEXT