ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா
கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் மூளையதிர்ச்சி காரணமாக ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆகாஷ் தீப், பேட்டிங்கில் 29 ரன்கள் சேர்த்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஆகாஷ் தீப் பேட்டிங் செய்த போது ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன் ஆகியோர் வீசிய பந்துகள் அவரது ஹெல்மெட்டில் அடுத்தடுத்து தாக்கின.
இதையடுத்து அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால், எஞ்சிய ஆட்டத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.