விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன்: சாத்விக் - ஷிராக் ஜோடி விலகல்

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தின்போது காயம் காரணமாக இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி விலகியுள்ளது.

இந்தப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சாத்விக், ஷிராக் ஜோடியானது, மலேசியாவின் காங் காய் ஜிங், ஆரோன் தாய் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 6-11 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது சாத்விக்கின் வலது தோளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டியிலிருந்து விலகுவதாக சாத்விக், ஷிராக் ஆகியோர் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து காங், ஆரோன் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT