இந்திய மகளிர் அணி வீராங்கனைகள்

 
விளையாட்டு

44 ஆண்டுகள் ஏக்கத்தை தீர்த்தது இந்திய மகளிர் அணி: ஒலிம்​பிக் போட்டிக்கும் தகுதி

செய்திப்பிரிவு

ஆசிய விளை​யாட்டு மகளிர் ஹாக்கி இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா, நடப்பு சாம்​பியனும், ஒலிம்​பிக்​கில் வெள்​ளிப் பதக்​க​மும் வென்ற சீனாவை எதிர்த்து விளை​யாடியது. இதில் இந்​திய அணி 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றது. இந்​திய அணி தரப்​பில் 10-வது நிமிடத்​தில் சாக் ஷி ராணா​விடம் இருந்து பெற்ற பாஸை லால்​ரெம்​சி​யாமி, ரிவர்ஸ் ஸ்டிக் ஷாட் மூலம் கோல் அடித்​தார். இதுவே வெற்றி கோலாக​வும் அமைந்​தது.

அணி​யின் வெற்​றி​யில் கோல்​கீப்​பர் சவிதா பூனி​யா​வின் பங்​களிப்​பும் முக்​கி​யத்​து​வம் பெற்​றது. 24-வது நிமிடத்​தில் சீனா​வுக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்​தது. ஆனால் சவீதா பூனியா சிறப்​பாக செயல்​பட்டு சீனா​வின் கோல் அடிக்​கும் முயற்​சியை தகர்த்​தார். இந்​திய அணி ஒரு கோல் மட்​டுமே அடித்த போதி​லும் போட்டி முழு​வதும் தற்​காப்பை பலப்​படுத்​திக் கொண்டு சீனாவை கோல் அடிக்க விடா​மல் பார்த்​துக் கொண்​டது. மாற்று கோல்​கீப்​ப​ராக களமிறங்​கிய பிச்சு தேவி​யும், சீனா​வின் கோல் அடிக்​கும் முயற்​சிக்கு பலமுறை முட்​டுக்​கட்டை போட்​டார்.

ஆசிய விளை​யாட்​டில் 44 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் இந்​திய மகளிர் அணி தங்​கப் பதக்​கம் வென்​றுள்​ளது. கடைசி​யாக இந்​திய மகளிர் அணி 1982-ம் ஆண்டு தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தது.

இதன் பின்​னர் 1998 மற்​றும் 2018-ம் ஆண்டு ஆசிய விளை​யாட்டு போட்​டிகளில் 2-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​திருந்​தது. ஜப்​பான் ஆசிய விளை​யாட்​டில் தங்​கப் பதக்​கம் வென்​றதன் வாயி​லாக வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் நடை​பெறும் ஒலிம்​பிக் போட்​டிக்கு இந்​திய மகளிர் அணி நேரடி​யாக தகுதி பெற்​றது.

இந்​தி​யா​விடம் தோல்வி அடைந்த சீனா 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் பெற்​றது. 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் ஜப்​பான் அணி ஷுட் அவுட்​டில் 4-2 என்ற கோல் கணக்​கில் தென் கொரி​யாவை வீழ்த்​தி வெண்​கலப்​ பதக்​கம்​ கைப்​பற்​றியது.

வில்வித்தையில் மேலும் 2 பதக்கம்​

வில்​வித்​தை​யில் நேற்று மகளிருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில் ரீகர்வ் கலப்பு அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் குங்​கும் மொஹோத். தீரஜ் பொம்​மதேவரா ஜோடி 3-5 (34-38, 35-37, 37-36, 37-37) என்ற கணக்​கில் சீனா ஜோடி​யிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றது.

தொடர்ந்து நடை​பெற்ற ஆடவருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரி​வில் தீரஜ் பொம்​மதேவ​ரா, சஞ்​ஜய் போகே, நீரஜ் சவு​கான் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 1-5 என்ற கணக்​கில் கொரி​யா​விடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம்​ கைப்​பற்​றியது.

வெண்கலம் வென்றார் நேத்ரா குமணன்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் பாய்​மரப்​படகில் மகளிருக்​கான டிங்கி (சிறு பாய்​மரப்​படகு) பிரி​வில் இந்​தி​யா​வின் நேத்ரா குமணன் வெண்​கலப் பதக்​கம் வென்​றார். ஆசிய விளை​யாட்​டில் 4-வது முறை​யாக பங்​கேற்​றுள்ள நேத்ரா குமணன் வெல்​லும் முதல் பதக்​கம் இது​வாகும்.

29 வயதாகும் சென்​னையை சேர்ந்த நேத்ரா குமணன் 14 புள்​ளி​களை குவித்து 3-வது இடம் பிடித்​தார். தாய்​லாந்​தின் சோபியா மாண்ட்​கோமெரி தங்​கப் பதக்​க​மும், சிங்​கப்​பூரின் ஜானியா அங்க் வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றனர்​.

SCROLL FOR NEXT