விளையாட்டு

மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா: ஆசிய விளையாட்டு போட்டி

2028 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

வேட்டையன்

சென்னை: நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இன்று (அக்.2) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவுடன் இந்தியா பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் 10-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தியது இந்தியா. லால்ரெம்சியமின் மின்னல் வேக கோல் சீனாவின் தடுப்பை கடந்து கோல் ஆனது.

தொடர்ந்து சீன அணி கோல் தேடலில் ஈடுபட்டது. அதை தடுக்கும் வகையில் இந்தியாவின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. மேலும், வாய்ப்பு கிடைக்கும் போது இந்திய அணி தாக்குதல் ஆட்டமும் ஆடி கவனம் ஈர்த்தது. இந்தியாவின் சவிதா பூனியா தடுப்பாட்டத்தில் அபார செயல்திறனை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக இருந்தன. அதுவும் அந்த இறுதி விநாடிகள் நெருங்க நெருங்க ஆட்டத்தில் அனல் பறந்தது. சீன அணியினரின் ஆட்ட வியூகம் எடுபடவில்லை. இந்திய அணி வீராங்கனைகள் தங்கள் ஆட்டத்திறன் மூலம் சீனாவுக்கு கோல் எதுவும் விட்டுக் கொடுக்காமல் வெற்றி பெற்றனர்.

44 ஆண்டுகளுக்கு பிறகு வாகை சூடிய இந்தியா

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 44 ஆண்டு கால ஹாக்கி கனவு நிறைவேறியது. 1982-க்குப் பிறகு ஆசிய போட்டியில் மகளிர் ஹாக்கியில் இந்தியா தங்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த வெற்றி அதை தகர்த்துள்ளது.

SCROLL FOR NEXT