விளையாட்டு

3-வது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி

செய்திப்பிரிவு

வதோதரா: இந்​தியா - ஜிம்​பாப்வே மகளிர் அணிகள் இடை​யி​லான 3-வது மற்​றும் கடைசி ஒருநாள் கிரிக்​கெட் போட்டி வதோத​ராவில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 39.5 ஓவர்​களில் 131 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மோடெஸ்​டர் முபிக்வா 37, கேப்​டன் ஜோஸ்​பின் நிகோமா 35 ரன்​கள் சேர்த்​தனர்.

இந்​திய அணி தரப்​பில் இடது கை சுழற்​பந்து வீச்​சாளரான வைஷ்ணவி சர்மா 5 விக்​கெட்​களை வீழ்த்​தினார். கிரந்தி கவுடு, சாயாலி சத்​கரே ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 132 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய மகளிர் அணி 17 ஓவர்​களில் 2 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது.

பிரதிகா ராவல் 56 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​களும், ஷபாலி வர்மா 26 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் விளாசினர். இந்த வெற்​றி​யின் வாயி​லாக 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் போட்​டித் தொடரை இந்​திய மகளிர் அணி 3-0 என முழு​மையாக கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT