இந்​திய வீராங்​கனை பர்​வீன் ஹூடா

 
விளையாட்டு

பதக்கம் பறிப்பு, தந்தைக்கு புற்றுநோய்: பகவத் கீதை துணையுடன் மீண்டெழுந்த பர்வீன் ஹூடா

செய்திப்பிரிவு

கடந்த காலத் தடைகள், மன உளைச்​சல்​, புற்​று​நோ​யால் அவதிப்​படும் தந்தை என அனைத்து கவலைகளை​யும் தாண்​டி, பகவத் கீதை​யின் தத்​து​வத்தை வாழ்​விய​லாக மாற்றி ஜப்​பான் ஆசிய விளை​யாட்டு போட்டி குத்​துச்​சண்​டை​யில் தங்​கம் வென்று வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார் இந்​திய வீராங்​கனை​யான பர்​வீன் ஹூடா.

சீ​னா​வின் ஹாங்​சோ​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் 57 கிலோ எடைப்​பிரி​வில் வெண்​கலப் பதக்​கம் வென்​றிருந்​தார் பர்​வீன் ஹூடா. ஆனால், இருப்​பிட விவரங்​களைச் சமர்ப்​பிப்​ப​தில் ஏற்​பட்ட சிறு நடை​முறைத் தவறு காரண​மாக அந்​தப் பதக்​கம் அவரிட​மிருந்து பறிக்​கப்​பட்​டது. அத்​துடன் அவருக்கு 22 மாத தடை விதிக்​கப்​பட்​ட​தால், பாரிஸ் ஒலிம்​பிக் போட்​டியை​யும் அவர் தவற​விட நேர்ந்​தது.

இந்த சோதனை காலம் குறித்​துப் பேசிய பர்​வீன் ஹூடா, ‘‘ஹாங்சோ ஆசிய விளை​யாட்டு பதக்​கம் பறிக்​கப்​பட்ட பின்​னர் எனது உலகம் இருண்​டு​விட்​டது போல் இருந்​தது. எல்​லாமே முடிந்​து​விட்​ட​தாக நினைத்​தேன். ஆனால், சிறிய தவறுக்​காக என் வாழ்வை இழக்​கத் தயா​ராக இல்​லை. பூஜ்ஜி​யத்​தில் இருந்து என் பயணத்தை மீண்​டும் தொடங்​கினேன்” என்று தெரி​வித்​தார்.

தடையி​லிருந்து மீண்டு வந்த அவர், கிளாஸ்கோ காமன்​வெல்த் போட்​டிகளின் காலிறு​தி​யில் தோல்​வியைச் சந்​தித்​தது மீண்​டும் ஒரு பெரும் சோகத்தை அளித்​தது. எனினும் கடந்த நான்கு ஆண்​டு​களாகப் புற்​று​நோய் மற்​றும் இதய நோயால் பாதிக்​கப்​பட்​டுள்ள தனது தந்தை லாக்​பத் ஹூடாவுக்கு கொடுத்த வாக்​குறு​தி​யைக் காப்​பாற்​றும் நோக்​கில் மீண்​டும் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டார்.

“2023 ஆசிய விளை​யாட்டு போட்​டிக்​குச் செல்​லும்​போது எனது தந்தை மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தார். அவரை மருத்​து​வ​மனை​யில் விட்​டு​விட்டு நான் அழுது​கொண்​டே​தான் போட்​டிக்​குச் சென்​றேன்” என்று நினை​வு​கூரும் பர்​வீன் ஹூடா, பறி​போன வெண்​கலப் பதக்​கத்தை தனது வீட்​டின் சுவரில் மாட்டி வைத்​திருந்​தார்.

பதக்​கத்​தின் நிறத்தை தங்​க​மாக மாற்​று​வேன் என்ற வெறியோடு அதைப் பார்த்​துக் கடின உழைப்பை கொடுத்​தேன். இன்று அந்​தப் பதக்​கம் தங்​க​மாகவே என் கைக்கு வந்​து​விட்​டது” என்று பெரு​மிதத்​துடன் கூறுகிறார் காவல் துறை உதவி ஆய்​வாள​ராக உள்ள பர்​வீன் ஹூடா.

கடுமை​யான மன உளைச்​சலில் இருந்த கால​கட்​டத்​தில், பகவத் கீதையே தனக்கு மன அமை​தி​யைத் தந்​தது என்று பர்​வீன் ஹூடா குறிப்​பிட்​டார். “குத்​துச்​சண்டை எனக்​குப் பலவற்​றைக் கொடுத்​துள்​ளது. எனவே, கீதை​யில் சொல்​லப்​பட்​டுள்ள ‘கடமை​யைச் செய், பலனை எதிர்​பா​ராதே’ என்ற தத்​து​வத்தை என் மனதில் ஆழமாகப் பதித்​துக் கொண்​டேன்.”

“முடிவைப் பற்றி கவலைப்​ப​டா​மல் என் பயிற்​சி​யில் முழு​மை​யான அர்ப்​பணிப்​பைக் கொடுத்​தேன். இதனால் நான் மனதள​வில் எப்​போதும் ஒரு நடுநிலை​யான, உறு​தி​யான நிலை​யில் இருக்க முடிந்​தது” என்​றார்.

தற்​போதைய வெற்​றியைத் தொடர்ந்து குடும்​பத்​துடன் சிறிது நேரம் செல​வழிக்க முடிவு செய்​துள்ள பர்​வீன், அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள உலக சாம்​பியன்​ஷிப் போட்டி மற்​றும் 2028 ஒலிம்​பிக் போட்​டிகளுக்​கான பயிற்​சிகளில் முழு​மூச்​சாக ஈடு​படத் திட்​ட​மிட்​டுள்​ளார்​. தடைகளைத்​ தகர்​த்​து எழுந்​துள்​ள பர்​வீன்​ ஹூ​டா​வின்​ இந்​த வெற்​றிப்​ பயணம்​ இந்​தி​ய விளை​யாட்​டுத்​ துறைக்​கு ஒரு பெரு​மைமிகு மைல்​கல்​லாகும்​.

SCROLL FOR NEXT