விளையாட்டு

ஹாக்கியில் இந்திய அணிக்கு 2-வது வெற்றி

செய்திப்பிரிவு

ககாமிகஹாரா: ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் மகளிருக்கான யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது இடத்தில் கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் நூஷின் (4-வது நிமிடம்), ஸ்ருதி (21-வது நிமிடம்), கிரண் (43-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியிருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (2-ம் தேதி) சிங்கப்பூருடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT