விளையாட்டு

யு-15 உலகக் கோப்பை கால்பந்து: கியூபாவை வீழ்த்தியது இந்திய அணி

செய்திப்பிரிவு

பாகு: அஜர்​பைஜான் நாட்​டிலுள்ள பாகு நகரில் யு-15 உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘கே’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்திய அணி தனது கடைசி ஆட்​டத்​தில் நேற்று கியூபாவுடன் மோதி​யது. இதில் இந்திய அணி 6-4 என்ற கோல்​கள் கணக்​கில் வெற்றி பெற்​றது.

இந்​திய அணி தரப்​பில் விக்​டர் லாலவ்ம்​புயா (1, 23-வது நிமிடங்​கள்), நிபாஸ் மீட்டி வாஹெங்​பாம் (6, 22-வது நிமிடங்​கள்), லால்​ரெம் ருயாவ்ஃபெலா (12, 27-வது நிமிடங்​கள்) ஆகியோர் தலா 2 கோல்​கள் அடித்​தனர். இந்​திய இளை​யோர் அணி, லாவோஸ், கேமரூன், பஹ்​ரைன், டிரி​னிடாட் அண்ட் டொபாகோ, கியூபா ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்​றது.

அதேவேளை​யில், செனகல், ஹோண்​டுராஸ், ஆப்​கானிஸ்​தான், கஜகஸ்​தான் ஆகிய அணிகளிடம் தோல்​வியடைந்​தது. கிரெனடா அணிக்கு எதிரான ஆட்​டத்தை டிரா செய்​தது. இதன் மூலம் இந்​திய அணி 87-வது இடத்​தைப் பிடித்​தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT