புதுடெல்லி: இந்திய ஆடவர் கால்பந்து அணி வரும் நவம்பரில் நியூஸிலாந்து சென்று அங்கு அந்த அணியுடன் நட்புரீதியிலான 2 போட்டிகளில் விளையாடும் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.
இரு அணிகள் இடையிலான முதல் போட்டி நவம்பர் 12-ம் தேதி ஆக்லாந்திலும், 2-வது போட்டி நவம்பர் 15-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து அணி நியூஸிலாந்து சென்று விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் நியூஸிலாந்து பயணத்தின் ஒரு பகுதியாக இந்தப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.