பிரேசில் கால்பந்து அணி வீரர்கள்
கொல்கத்தா: நட்பு ரீதியிலான அழைப்பு கால்பந்துப் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணியுடன் இந்திய கால்பந்து அணி இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்த போட்டி கொல்கத்தாவிலுள்ள புகழ்பெற்ற சால்ட் லேக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.உலகத் தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள பிரேசில் அணியில் வினிசியஸ் ஜூனியர், கேப்ரியல் மகல்ஹேஸ், புரூனோ குய்மாரஸ், மார்குயின்ஹோஸ் உள்ளிட்ட பிரபலமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மாறாக தரவரிசையில் 138-வது இடத்தில் இந்திய அணி, பிரேசில் அணியைச் சமாளித்து வெற்றி பெறுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.