விளையாட்டு

டைமண்ட் லீக்கில் சர்வேஷ் சாதனை

செய்திப்பிரிவு

மோனாக்கோ: மோ​னாக்​கோ​வில் டைமண்ட் லீக் தடகள போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான உயரம் தாண்​டு​தலில் இந்​தி​யா​வின் சர்​வேஷ் குஷாரே 2.26 மீட்​டர் உயரம் தாண்டி 3-வது இடம் பிடித்​தார். டைமண்ட் லீக் தொடரில் உயரம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் ஒரு​வர் பதக்க மேடைடைய அலங்​கரிப்​பது இதுவே முதன்​முறை​யாகும்.

ஈட்டி எறிதல் நட்​சத்​திரம் நீரஜ் சோப்ரா (2022-ம் ஆண்டு முதல் 13 முறை), நீளம் தாண்​டு​தல் வீரர் முரளி சங்​கர் (2023-ல் ஒரு முறை) மற்​றும் முன்​னாள் வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா (2015-ல் இரண்டு முறை) ஆகியோ​ருக்​குப் பிறகு டைமண்ட் லீக் தொடரை முதல் மூன்று இடங்​களுக்​குள் முடித்த 4-வது இந்​தி​யர் என்ற பெரு​மையை சர்​வேஷ் குஷாரே பெற்​றார்.

உக்​ரைனின் ஒலே டொரோஷ்சுக் 2.32 மீட்​டர் உயரத்​தைத் தாண்டி பட்​டத்தை வென்​றார். கிரேட் பிரிட்​டனின் ஜாக் கிமானி 2.30 மீட்​டர் உயரத்​தைத் தாண்டி இரண்​டாம் இடத்​தைப்​ பிடித்​தார்​.

SCROLL FOR NEXT