இந்தியாவின் பிரித்திகா பிரதீப்
மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரித்திகா பிரதீப் 145-142 என்ற புள்ளிகள் கணக்கில் உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள துருக்கியின் ஹசல் புருனை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
முன்னதாக நடைபெற்ற அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பிரித்திகா பிரதீப், சிக்கதா தனிபார்த்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் 228-232 என்ற செட் கணக்கில் கொலம்பியா அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.