விளையாட்டு

​காமன்​வெல்த் இளைஞர் பளுதூக்குதல்: 4 தங்​கப் பதக்​கம் வென்​றது இந்தியா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சமோ​வா​வின் அபி​யா​வில் காமன்​வெல்த் இளைஞர், ஜூனியர் பளுதூக்குதல் சாம்​பியன்​ஷிப் மற்றும் அதற்கு இணை​யான யுனிவர்​சல் கோப்பை (சீனியர்) போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளில் இந்தியா 4 தங்​கப் பதக்​கங்​களைக் கைப்​பற்றி அசத்​தி​யுள்​ளது.

ஆடவருக்​கான 65 கிலோ எடைப்​பிரி​வில் சுனில் சிங் மொத்தம் 271 கிலோ (ஸ்​னாட்ச் 126 + கிளீன் அண்ட் ஜெர்க் 145) எடையைத் தூக்கி தங்​கப் பதக்​கத்தை வென்​றார். மகளிருக்​கான 58 கிலோ எடைப்​பிரி​வில் ஐசாங்பா கோகோய் 185 கிலோ (ஸ்​னாட்ச் 79 + கிளீன் அண்ட் ஜெர்க் 106) எடையை தூக்கி தங்​கம் வென்​றார்.

ஆடவருக்​கான 71 கிலோ எடைப்​பிரி​வில் அபினோப் கோகோய் 284 கிலோ (ஸ்​னாட்ச் 129 + கிளீன் அண்ட் ஜெர்க் 155) எடையை தூக்கி தங்​கப் பதக்​கத்​தைக் கைப்பற்றினார். யுனிவர்​சல் கோப்​பை​யில் ஆடவருக்​கான 65 கிலோ எடைப்​பிரி​வில் அருணாச்​சலப் பிரதேசத்​தைச் சேர்ந்த சாரு 289 கிலோ (ஸ்​னாட்ச் 127 + கிளீன் அண்ட் ஜெர்க் 162) எடையைத் தூக்கி தங்​கம் வென்​றார்​.

SCROLL FOR NEXT