விளையாட்டு

வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

செய்திப்பிரிவு

பாங்காக்: ஆசிய கோப்பை உலக ரேங்​கிங் வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரிவு அரை இறுதியில் சிக்​கதா தனி​பார்த்​தி, ராஜ் கவுர், தேஜல் சால்வே ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 229-226 என்ற கணக்​கில் தாய்​லாந்து அணியை வீழ்த்​தி​யது.

இறு​திப் போட்​டி​யில் இந்​திய மகளிர் அணி​யானது போட்டித் தரவரிசை​யில் 3-வது இடத்​தில் உள்ள கஜகஸ்​தான் அணியை எதிர்​கொள்​கிறது. ஆடவருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரிவு அரை இறு​தி​யில் ரஜத் சவு​கான், ரிஷப் யாதவ், உதய் கம்​போஜ் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 233-234 என்ற கணக்​கில் வியட்​நாம் அணியிடம் தோல்வி அடைந்​தது.

          

இதைத் தொடர்ந்து நடை​பெற்ற வெண்​கலப் பதக்கத்துக்கான ஆட்​டத்​தில் இந்​திய ஆடவர் அணி 234-232 என்ற கணக்​கில் பூட்​டான் அணியை வீழ்த்​தி​யது. ஆடவருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரிவு அரை இறு​தி​யில் தேவாங் குப்​தா, சுக்​செ​யின் சிங், ஜூயல் சர்க்​கார் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 5-1 என்ற கணக்கில் மலேசி​யாவை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. மகளிருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரி​வில் வெண்கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் ரூமா பிஸ்​வாஸ், கீர்த்​தி, ரிதி போர் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 5-1 என்ற கணக்​கில் மலேசி​யா​வை வீழ்​த்​தியது.

SCROLL FOR NEXT