அகமதாபாத்: இந்தியா யு-19 மற்றும் ஆஸ்திரேலியா யு-19 கிரிக்கெட் அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா யு-19 அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா யு-19 அணி 315 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 141 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா யு-19 அணி 43.5 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா யு-19 அணியின் தரப்பில் தன்மய் பலோடா 41 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 11 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா யு-19 அணி 0.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா யு-19 அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா யு-19 அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.