ஆசிய அலைச்சறுக்கு கூட்டமைப்பின் தலை​வ​ராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்​ள அருண் வாசு

 
விளையாட்டு

ஆசிய அலைச்சறுக்கு தலைவராக இந்தியாவின் அருண் வாசு தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ஆசிய அலைச்​சறுக்கு கூட்​டமைப்​பின் தலை​வ​ராக இந்​திய அலைச்​சறுக்கு சங்​கத்​தின் தலை​வ​ரான அருண் வாசு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.

சர்​வ​தேச அலைச்​சறுக்கு கூட்​டமைப்​பின் மேற்​பார்​வை​யில் நடை​பெற்ற வாக்​கெடுப்​பின் வாயி​லாக அருண் வாசு தேர்வு செய்யப்பட்​டுள்​ளார்.

வின்ட் அலைச்​சுறுக்கு மற்​றும் அலைச்​சறுக்கு வீர​ராக விளங்​கும் அருண் வாசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்​திய அலைச்​சறுக்கு கூட்​டமைப்​பின் தலை​வ​ராக பணி​யாற்றி வரு​கிறார். இவரது தலை​மை​யின் கீழ் இந்​திய அலைச்​சறுக்கு வீரர்​கள் ஆசிய விளையாட்​டுப் போட்​டிகளுக்​குத் தகுதி பெற்​றதும், ஆசிய அலைச்சறுக்கு சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் முதல் பதக்​கத்தை வென்றதும் குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT